டாக்டர் வின்சென்ட் அசோகனுக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகிறது. இதை அறிந்து கொள்ளும் புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு திருடர்களும் அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டு பங்களாவுக்குள் நுழைகிறார்கள். இந்த கொள்ளை முயற்சியின்போது 4 பேரும் பங்களாவின் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது திருடர்களுடன் ரவி மரியா ரகசிய ஒப்பந்தம் ஒன்றை போடுகிறார். இந்த சூழலில் அந்த பங்களாவின் உரிமையாளர் வின்சென்ட் அசோகன் மற்றும் ரவி மரியா பற்றி 4 பேருக்கும் சில உண்மைகள் தெரியவருகிறது. பதறிப் போகும் நால்வரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அது நடந்ததா? என்பதே மீதி கதை. புகழ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைத்தாலும், பெரியளவில் சிரிப்பு வரவில்லை. ந்தாலும், பெரியளவில் காமெடி கைகொடுக்கவில்லை. புகழ் உடன் கூட்டணி அமைத்திருக்கும் கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகியோரும் நகைச்சுவைக்காக போராடும் நிலையே இருக்கிறது. ஆனாலும் சில டைமிங் காமெடிகள் மூலம் ஓரளவு நிலைமையை சரிசெய்கிறார்கள். வின்சென்ட் அசோகன் மிரட்டல் நடிப்பால் கவர்கிறார். அவரது ஆர்ப்பாட்டமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரவி மரியா கலக்கி விட்டார். வழக்கம்போலவே நக்கல், நய்யாண்டியுமாக கலகலப்பை உண்டாக்கி, படத்தை ரசிக்க வைக்கிறார். இருவரின் இருப்பு தான் படத்தை தாங்கி பிடிக்கிறது. பிரக்யா நயனின் கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல். யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறது. சுபாஷ் முனிரத்னம் இசை ஓகே ரகம். இத்தனை கலைஞர்கள் இருந்தும் காமெடிக்கு தட்டுப்பாடு இருப்பது படத்தின் பெரும் பலவீனம். திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார்கள். ஆங்காங்கே குறைகள் இருந்தாலும், ஒரு பொழுதுபோக்கு படைப்பை கொடுக்கவேண்டும் என்பதில் ஓரளவு நிற்கிறார், இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/movie-review/4-idiots-movie-review




