சென்னை, அதிகாலை நேரத்தில் அப்பாவி கிராம மக்கள் மீது என்கவுன்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மூவர் சுட்டுக் கொலை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரை மான் வேட்டை என்ற பொய்க் காரணத்தைக் கூறி கர்நாடக வனத்துறை கொடூரமாகச் சுட்டுக் கொன்ற சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! அதிகாலை நேரத்தில் அப்பாவி கிராம மக்கள் மீது என்கவுன்டர் நடத்த வேண்டிய அவசியம் என்ன? கைது செய்ய வேண்டும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அப்பாவி எளிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறை ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! அப்பாவித் தமிழர்களைக் குறிவைத்துத் தாக்கப்படும் இதுபோன்ற கொடூர வன்முறைச் செயல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்! இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-need-to-carry-out-an-encounter-against-innocent-villagers-manickam-tagore




