சர்வதேச கார் கடத்தல் நெட்வொர்க்கை முறியடிப்பதற்காக சுங்கத்துறை 'ஆபரேஷன் நும்கோர்' (Operation Numkhor) என்ற புலனாய்வு நடவடிக்கையைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரப்படுத்தி உள்ளது. சர்வதேச கும்பல், வரி செலுத்தாமல் பூட்டானில் இருந்து இந்தியாவுக்குக் கடத்திவந்துள்ளது. கடத்தல் கும்பலிடம் இருந்து சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாங்கியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரி ஏய்ப்பு செய்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்கள் குறித்த இந்த விரிவான விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்களான துல்கர் சல்மான், அமித் சக்காலக்கல் உள்ளிட்ட பலரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்தக் கடத்தல் நெட்வொர்க் மூலம் இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே சுமார் 38 சொகுசு வாகனங்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துல்கர் சல்மான் இந்த நிலையில் பூட்டானில் இருந்து வரி ஏய்ப்பு செய்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூருவில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு 'டொயோட்டா லேண்ட் குரூஸர்' (Toyota Land Cruiser) ரக ஆடம்பர கார்களை சுங்கத்துறை தடுப்புப் பிரிவு (Customs Preventive Unit) அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்துள்ளனர். கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்! இந்த வாகனங்களை இந்தியாவில் சட்டவிரோதமாகப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்கள், போலியான பிரமாணப் பத்திரங்கள் மற்றும் போலி முகவரி சான்றுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த கார்களின் உண்மையான உற்பத்தி மற்றும் இறக்குமதி பின்னணியை மறைப்பதற்காகத் திட்டமிட்ட முறையில் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்கள் சர்வதேச கார் கடத்தல் கும்பல், பூட்டான் - மேற்கு வங்க எல்லையில் உள்ள 'புண்சோலிங்' (Phuntsholing) என்ற பகுதி வழியாகத்தான் ஆடம்பர கார்களை இந்தியாவிற்குள் கடத்தி வருகிறது. பூட்டான் நாட்டின் வழியாக கார்களைக் கொண்டு வரும்போது வரி விதிப்பில் உள்ள சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் முதலில் அஸ்ஸாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த வாகனங்களைப் பதிவு செய்துள்ளனர். அதன் பின்னர், அங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குக் கொண்டுவரப்பட்டு, பெரும் பணக்காரர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பிரமாண்ட கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய அஸ்ஸாம் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஏஜென்ட்டுகள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/bhutan-car-smuggling-case-involving-dulquer-salmaan-two-more-luxury-cars-seized




