சென்னை, காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மலர் தூவி மரியாதை தமிழ்நாடு அரசின் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆகியோர் இன்று சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். காந்தியடிகள் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் போர்பந்தரில் பிறந்தார். தனது 18 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து, சட்டப் படிப்பை இங்கிலாந்தில் பயின்றார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட உத்தமர் காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். “வெள்ளையனே வெளியேறு” இந்தியாவில், இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்ததைக் கண்டித்து குஜராத் மாநிலம் அகமதாபாத் கடற்கரையிலிருந்து தண்டி நோக்கி நீண்ட நடை பயணத்தை தொடர்ந்தார். தண்டி கடற்கரை வந்து சேர்ந்த பின்பு உப்பினை தயாரித்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக பகிரங்கமாக பொது மக்களுக்கு உப்பு விநியோகம் செய்தார். இந்நிகழ்வு “உப்பு சத்தியாகிரகம்” என்று அழைக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்று பெரும் பங்கு வகித்தார். காந்தி அவர்களுக்கு “மகாத்மா” எனும் பட்டத்தை கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் வழங்கினார். உத்தமர் காந்தியடிகள் அவர்கள் 1921-ஆம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்த போது, பெரும்பாலான மக்கள் வேட்டி துண்டு அணிந்திருப்பதைக் கண்டார். அன்று முதல் ஆடம்பர ஆடைகளைத் துறந்து கதர் ஆடைகளை அணியத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், தனது இறுதி நாள் வரை கதர் ஆடைகளை மட்டுமே அணிந்து வந்தார். தமிழ்நாடு அரசின் சார்பில், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் நாள், ஆண்டுதோறும் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அருண் தம்புராஜ், அருங்காட்சியகங்களின் இயக்குநர் பாஸ்கர பாண்டியன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் மாலதி ஹெலன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/gandhijis-birthday-floral-tributes-on-behalf-of-the-government




