லண்டன், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து பிரெண்டன் மெக்கல்லம் விலகியுள்ளார். இது தொடர்பாக மெக்கல்லம் கூறியதாவது, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டதை நான் மிகவும் ரசித்தேன். நாம் இணைந்து சாதித்தவற்றைக் குறித்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். இது எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பாக்கியம் மற்றும் கவுரவம்; இதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தப்பயணத்தில் ஆதரவளித்த வீரர்கள், பணியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் மெக்கல்லம் தொடர்ந்து செயல்பட உள்ளார். மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் போட்டியில் 'பாஸ்பால்' என்ற அதிரடி பாணியில் இங்கிலாந்து அணி விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியதாவது, சில அற்புதமான வெற்றிகள் நிறைந்த விறுவிறுப்பான காலகட்டத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மெக்கல்லம் புத்துயிர் அளித்தார்; இந்தப் பொறுப்பில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். டெஸ்ட் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம் என்று நாங்கள் கருதுகிறோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/mccullum-steps-down-as-england-head-coach




