பிக்பாஸ் சீசன் 10 ல் கலந்து கொண்ட நடிகை ஆனந்தியின் தந்தை சுப்பையா மாரடைப்பு காரணமாக திடீரென இன்று உயிரிழந்தார். தொடர்ந்து ஆனந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார். முன்னதாக இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. அதில் கலந்து கொண்ட ஆனந்தி ஏற்கனவே மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகி இருந்தது. இதற்கிடையில் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே ஆனந்தியின் வீட்டிலிருந்து பிக்பாஸ் யூனிட்டுக்கு அவரது தந்தை இறந்தது குறித்த தகவல் வர, தகவலை அங்கு ஆனந்தியிடம் சொல்லாமலேயே அவரை நிகழ்ச்சியிலிருந்து அவசரமாக அனுப்பி வைத்தனர். ஆனந்தி மறைந்த ஆனந்தியின் அப்பா உடற்கல்வி ஆசிசியராக பணி புரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகும் விளையாட்டுகளுக்கு ரெஃப்ரியாகச் செல்வது போன்றவை மூலம் தன்னை பிசியாகவே வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் ஆனந்தியின் அம்மா நம்மிடம் பேசிய போது, உடற்கல்வி ஆசிரியர் என்பதால் ஆனந்தியை விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வைத்தார் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனந்தியின் பெற்றோர் கோவையில் வசித்து வருகிற நிலையில், ஆனந்தி பிக்பாஸ் சென்றதால் அவரது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அவரது அம்மா ரேணுகா மட்டும் சென்னைக்கு வந்திருந்தார். சுப்பையா கோவையில்தான் இருந்தாராம். சுப்பையா –ரேணுகா தம்பதிக்கு ஆன்ந்தி தவிர ஒரு மகன் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/television/biggboss-tamil-10-contestant-anandhis-father-passed-away




