புதுடெல்லி, 1932-ல் இந்திய விமானப்படை (IAF) அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, விமானப்படை தளபதி ஏ.பி.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் நீண்டகால திட்டத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அனைத்து விஷயங்களும் திட்டமிட்டபடி நடந்தால், நடப்பு நிதியாண்டிலேயே அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். விமானத்தின் விலை மற்றும் இதர முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில், ஆண்டுக்கு 35 முதல் 40 போர் விமானங்கள், இந்திய விமானப்படைக்கு தேவைப்படும். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, விமானப்படை பலத்தை பெருக்க வேண்டும். ரஷியா Su-57 ரக விமானங்களை வழங்க முன்வந்தது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/agreement-to-purchase-114-rafale-aircraft-to-be-finalized-soon-air-force-commander-informs




