சென்னை, ரூ.100 கோடி மோசடி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி நடந்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தி.மு.க. பிரமுகர் அரசகுமார் என்பவரும், அவருடைய உறவினர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் போலீசார் குற்றம்சுமத்தி உள்ளனர். அவர் தொடர்பான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந் தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் வரவழைத்தும் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அமலாக்கத்துறை விசாரணை இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான ரூ.100 கோடி ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷ் மீது பதிவு செய்த எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோதமாக நடைபெற்ற பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், அரசகுமார் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அமலாக்கத்துறை பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-corruption-case-against-anbil-mahesh-enforcement-directorate-begins-investigation



