இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்களில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கௌதம் கம்பீரிடம், அவர் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. கௌதம் கம்பீர் அதற்கு பதிலளித்த அவர், "விமர்சனமா? கோப்பைகளை வெல்வதே எனது வேலை. அதை மட்டுமே நான் நம்புகிறேன். அதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். மற்றவர்களுக்கு எனக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். நான் மற்றவர்களின் விருப்பங்களையோ, கருத்துகளையோ பொருட்படுத்துவதில்லை" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அது இயல்புதான். நம்முடைய வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்றிருக்கிறார். Toxic: "சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; நாங்கள் ஒன்றும்." - 'டாக்ஸிக்' பட விழாவில் யஷ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://sports.vikatan.com/cricket/gautam-gambhir-breaks-silence-on-recent-criticism




