டோக்கியோ, இந்தியாவுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 போட்டிக்கான ஜப்பான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஜப்பான் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள உலக சாம்பியனான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சொனா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22ம் தேதி இந்த டி20 போட்டி நடைபெற உள்ளது. கேப்டனாக கெண்டல் இந்நிலையில், இந்த டி20 போட்டிக்கான ஜப்பான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜப்பான் அணியின் கேப்டனாக கெண்டல் கடோவாக்கி-பிளெமிங் அணியின் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சுயோஷி தகாடா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஜப்பான் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள லெக்-ஸ்பின்னர் மகோட்டோ தனியாமாவும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஜப்பான் அணி கெண்டல் கடோவாக்கி-பிளெமிங் (கேப்டன்), சார்லி ஹாரா-ஹின்சே, பெஞ்சமின் இடோ-டேவிஸ், அலெஸ்டர் கடோவாக்கி-பிளெமிங், கோஹி குபோடா, ஜேக் குசுதா-நாயர்ன், வட்டாரு மியாவூச்சி (விக்கெட் கீப்பர்), ரெயோ சகுரானோ-தாமஸ், அலெக்ஸ் ஷிராய்-பாட்மோர் (விக்கெட் கீப்பர்), ஷோமா சுகாயா-ஸ்லேட்டர், டெக்லான் சுசுகி-மெக்கோம்பு, சுயோஷி தகாடா, இப்ராஹிம் தகாஹாஷி, மகோட்டோ தனியாமா, லக்லான் யமமோட்டோ-லேக். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/japan-name-squad-for-historic-india-t20i-in-sano




