கடலூர் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் உள்ள முதல் சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனம் (என்.எல்.சி.) செயல்பட்டு வருகிறது. இதில், முதல் சுரங்கத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. சுரங்க பணிக்காக பயன்பட்டு வந்த மண் அகற்றும் இயந்திரத்தில் தீப்பிடித்து, பற்றி எரிந்துள்ளது. அசம்பாவிதம் தவிர்ப்பு எனினும், அந்த நேரத்தில் சுரங்கத்தில் தொழிலாளர்கள் யாரும் பணிபுரியவில்லை. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-fire-breaks-out-in-neyveli-mine




