போபால், மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், ‘கோபி’ என்ற பெயருடைய கிளி ஒன்றை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார். திடீரென மறைந்த கிளி சோஹாக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்காங்காமேளா மைதானம் அருகில் வசிக்கும் இவரது வீட்டில் இருந்து, கடந்த சனிக்கிழமை மதியம் இந்த கிளி திடீரென பறந்து சென்று காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கிளியை தீவிரமாக தேடி வருகின்றனர். பரிசு தொகை உயர்வு கிளியை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.11,000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கிளி கிடைக்காததால், தற்போது அந்தப் பரிசு தொகை ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உண்ணாவிரத சபதம் தன் உயிர்போன்ற வளர்த்த கிளி திரும்ப கிடைக்கும் வரை தான் உண்ணாவிரதம் இருக்க போவதாக அந்த முன்னாள் ராணுவ வீரர் கண்ணீருடன் சபதம் மேற்கொண்டுள்ளார். சிறப்பு பூஜை இந்நிலையில், அறிவியல் பூர்வமான தேடுதல் ஒருபுறம் இருக்க, ஆன்மீக ரீதியாகவும் தனது செல்லப் பறவையை மீட்க குடும்பத்தினர் களம் இறங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் உள்ளூர் பண்டிதர் ஒருவரை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். காணாமல் போன கிளி ‘கோபி’ எந்த ஆபத்தும் இன்றி பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக, வீட்டில் ஒரு சிறப்பு 'ஹவன்-பூஜை' மற்றும் ஆன்மீகச் சடங்குகளை நடத்த குடும்பத்தினர் முழு வீச்சில் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/pet-parrot-gopi-missing-reward-21000-rupees




