பெரம்பூர், முன்விரோதம் காரணமாக கார் டிரைவரை கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் சென்னை ஏழுகிணறு தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது செரிப் (வயது 47). கார் டிரைவரான இவருக்கும், மண்ணடி இப்ராகிம் தெருவைச் சேர்ந்த சாதிக் அலி (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலை முகம்மது செரிப் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர், அவரை வழிமறித்து, சாதிக் அலி குடும்பத்தினரிடம் ஏன் பிரச்சினை செய்கிறாய்? என கேட்டு கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர். கைது இதில் பலத்த காயமடைந்த முகம்மது செரிப், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக சாதிக் அலி, பைசல் ரகுமான் (32), மைதீன் (37), அப்துல் காசிம் (35) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/perambur-4-arrested-for-stabbing-car-driver




