சென்னை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- 238 புகார்கள் நடவடிக்கை தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் பகுதிகளாக கருதப்படும் 12,547 இடங்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையிலான 7 நாட்களில் இந்த அதிரடிப் படையினர் 238 புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 20 வழக்குகள் பதிவு இந்த அதிரடிப் படையினர் அளித்த புகார் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல, காணாமல்போன பெண்கள், குழந்தைகள் என 5 பேர் மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதோடு பள்ளியை விட்டு நின்ற 61 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,448 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/singappen-special-rapid-force-takes-immediate-action-on-238-complaints-in-one-week




