சென்னை, விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வாழ்த்து பாரத மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் துயரங்களையும் நீக்கி, நம் வினைகள் அனைத்தையும் தீர்த்து, வெற்றி, வளம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை அருளும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வணங்கும் இப்புனித நன்னாளில், அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கையும், நல்ல சிந்தனையும், மகிழ்ச்சியும் நிறைந்து, தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையவும், இல்லங்கள் அனைத்திலும் அன்பும் அமைதியும் செழிக்கவும் விநாயகப் பெருமானை பிரார்த்திப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayaka-chaturthi-greetings-from-nainar-nagendran




