திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ம் தேதி டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் 15.8.2026, சனிக்கிழமை, சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.8.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-in-tirunelveli-district-on-august-15-collector-orders




