தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி. இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடப்பட்ட இவர், நேற்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. இவரின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகை திரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``என்னுடைய மிகச் சிறப்பான திரைப்படங்கள் ஒன்றில் உங்களது பெயரைத் தாங்கி நடித்திருப்பது, என் வாழ்நாளின் மிகச்சிறந்த பெருமைகளில் ஒன்றாக எப்போதும் இருக்கும். View this post on Instagram ஆனால், உங்களை அறிந்திருப்பதும், உங்களது அன்பைப் பெற்றிருப்பதும் நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயமாகும். உங்களது அரவணைப்பிற்கும், கனிவிற்கும், சிரிப்பிற்கும் மற்றும் 'மிகச்சிறந்த கலைஞர்கள் எப்போதும் மிக எளிமையான மனிதர்களாகவே இருப்பார்கள்' என்பதை எனக்கு எப்போதும் நினைவூட்டியதற்கும் நன்றி. உங்களது குரல் என்றும் வாழும். அமைதியாக உறங்குங்கள் ஜானகி அம்மா. உங்களை நான் மிகவும் மிஸ் செய்வேன்" எனப் பதிவிட்டிருக்கிறார். Toxic: இரண்டு முறை தள்ளிப்போன ரிலீஸ்; இறுதியாக திரையை எட்டும் யஷின் 'டாக்சிக்'! - எப்போது தெரியுமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/trisha-has-expressed-her-condolences-on-death-of-playback-singer-janaki



