இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற உதவியாளருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்திருக்கும் 96 பக்க அறிக்கையின்படி, 89 வழக்குகளுடன் தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடங்களில், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகள், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகள், கேரள முதல்வர் வி.டி. சதீசன் மீது 18 வழக்குகள் உள்ளன. ரேவந்த் ரெட்டி மேலும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது 5, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் ஆகியோர் மீது தலா 4 வழக்குகள் உள்ளன. தமிழ்நாட்டின் முதல்வர் சி. ஜோசப் விஜய், பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் மீதும் தலா 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிக்கிம், பஞ்சாப், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் நிலுவையில் உள்ளது. ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை மாநில அளவிலான சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, தீவிரமான குற்றவியல் வழக்குகளைக் கொண்ட எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் முதலிடத்தில் மேற்கு வங்கம் இருக்கிறது. அதிகபட்சமாக மேற்கு வங்க 58 சதவிகித எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து கேரளா (57%), ஆந்திரப் பிரதேசம் (56%), தெலங்கானா (49%), ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா (தலா 45%), பீகார் (42%), மற்றும் மகாராஷ்டிரா (40%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா (Andhra) சந்திரபாபு - பவன் மக்களவையின் மொத்தம் 543 எம்பி-க்களில் 170 பேர் (31%) மீது தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக தெலங்கானா, கேரளா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணிசமான எம்பி-க்கள் மீது வழக்குகள் உள்ளன. அதேபோல், மாநிலங்களவையில் உள்ள 233 உறுப்பினர்களில் 75 பேர் (33%) மீது குற்றவியல் வழக்குகள் உள்ள நிலையில், அவற்றில் 40 பேரின் (18%) வழக்குகள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய மிகத் தீவிரமான வழக்குகள் ஆகும். ஜூலை 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் பதவியில் உள்ள மற்றும் முன்னாள் எம்பி-க்கள்/எம்எல்ஏ-க்கள் மீது மொத்தம் 4,192 குற்றவியல் வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 1,171 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, மக்கள் பிரதிநிதிகள் மீதான இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றங்கள் இதன் முன்னேற்றத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தீர்மானம். தக்கவைக்கப்படுமா தமிழ்நாட்டின் உரிமை? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/chief-ministers-of-14-indian-states-face-serious-criminal-cases




