தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் குமார்(30) என்பவர் கேட் கீப்பராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு அந்தோதியா ரயில் வந்தது. அப்போது ராகுல் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தோதியா ரயில் முன் விழுந்து தற்கொலை செய்வதற்கு முயன்றுள்ளார். உயிரிழந்த ரயில்வே ஊழியர் ராகுல்குமார் இதைப் பார்த்த கேட் கீப்பர் ராகுல் பதறியபடி யாரென்று தெரியாத அந்த நபரைக் காப்பாற்றுவதற்காக ஓடியிருக்கிறார். அப்போது அந்த நபர் ரயில் முன் பாய்வதற்கு முயல ராகுல் அவரைத் தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் உள்ளே விழுந்து நிலையில் ரயில் பயங்கரமாக மோதியது. தண்டவாளத்தில் விழுந்த இருவரும் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். இதையறிந்து வந்த ரயில்வே போலீஸார் இருவரின் உடல் பாகங்களையும் சேகரித்து உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முயன்றவரைத் தடுக்க சென்று உயிரிழந்த கேட் கீப்பர் ராகுலுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆகிறது. ரயில்வே கேட் ராகுல் சிறப்பாகப் பணி செய்யக்கூடியவர். மனிதநேயமும் அவரிடம் நிறைந்திருக்கும். தன் உயிரைப் பற்றி துளியும் கவலைபடாமல் முகம் தெரியாத நபரைக் காப்பாற்றச் சென்றவருக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல மனம் கொண்ட அவர் வாழ்ந்திருக்க வேண்டியவர் என அவருடன் பணி புரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் தஞ்சாவூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/accidents/thanjavur-man-commits-suicide-in-front-of-train-gatekeeper-tried-to-save-him-also-killed




