காக்ரோச் ஜனதா கட்சி சோசியல் மீடியாவில் தொடங்கி குறுகிய காலத்தில் மாணவர்களின் ஆதரவை பெற்று இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டது. அக்கட்சியின் நிறுவன தலைவர் அபிஜீத் திப்கே அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து அதற்காக போராட இந்தியா வந்தார். டெல்லியில் அவர் தலைமையில் நடந்த மாணவர் போராட்டத்தால் மத்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருக்கும் அபிஜீத்திற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அபிஜீத் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். இது குறித்து அவர் தாயார் அனிதா திப்கே கூறுகையில், ''நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய நாடு தழுவிய போராட்டம் அவரை தேசிய அளவில் பிரபலமாக்குவதற்கு முன்பிருந்தே, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக எங்கள் குடும்பத்திற்குத் திருமண வரன்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அபிஜீத்திற்கு திருமண வரன்கள் வந்துகொண்டிருக்கின. அபிஜீத்திற்கு திருமண ஆர்வம் அதிகரித்து வந்தபோதிலும், பொருளாதார ரீதியாக நிலைபெற்ற பின்னரே திருமணம் செய்துகொள்வேன் என்பதில் எனது மகன் உறுதியாக இருந்து வருகிறான். `படிப்பை முடித்த பிறகு நான் ஏதாவது சம்பாதிக்கவேண்டும். அப்படி இல்லாமல் நான் எப்படித் திருமணம் செய்துகொள்வது?' என்று அவன் எங்களிடம் கூறினான். எங்களிடம் போதுமான பணம் இருக்கிறது என்று நான் அவனிடம் சொன்னேன். ஆனால், அவனோ சொந்தமாகச் சம்பாதிக்க விரும்புவதாகக் கூறினான். அவன் எவ்வளவு நேர்மையானவன் என்றால், தனது திருமணத்திற்காக ஆடைகளைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறினான். எங்களது மகன் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வொரு பெற்றோரும் இதையே விரும்புவர். நானும் அதனை விரும்புகிறேன். ஆனால் இவ்விவகாரத்தில் இறுதி முடிவை அவன்தான் எடுக்கவேண்டும். இது குறித்து சமீபத்தில் அவனிடம் பேசவில்லை. நாங்கள் எதையும் விவாதிக்கவில்லை. அவனுக்குப் பேசுவதற்கு அதிக நேரம்கூட கிடைப்பதில்லை. நாங்கள் வீடியோ அழைப்புகள் மூலம் பேசுகிறோம். பெரும்பாலும் அவனது உடல்நலம் குறித்தே பேசுகிறோம். அவன் அரை மணி நேரம் பேசிவிட்டுத் தூங்கச் சென்றுவிடுவான்" என்று அவர் கூறினார். அபிஜீத்திற்கு எதாவது பெண் பார்த்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ``நான் யாரிடமும் பேசவில்லை. யாரையும் சந்திக்கவும் இல்லை. நான் எந்த பெண்ணையும் பார்க்கவில்லை. கடந்த ஒரு மாதத்தில் இது குறித்து அவனிடம் பேசவே இல்லை" என்றும் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/many-marriage-proposals-are-coming-in-but-he-refuses-to-get-married-what-is-the-reason-given-by-cjp-abhijits-mother




