திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மதுபோதையில் தந்தையை மரக்கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, தனது மனைவிதான் கொலை செய்தார் என நாடகமாடிய மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குடும்பத் தகராறு வடமதுரை பி.கோசவபட்டி அருகே உள்ள சிக்குபோலகவுண்டன்பட்டி தோட்டத்து வீட்டைச் சேர்ந்தவர் விவசாயி ஊமைச்சாமி (எ) பெருமாள் (வயது 60). இவருடைய மகன் முத்தையா (வயது 30), ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். முத்தையா நந்தினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் முத்தையாவிற்கும் அவரது மனைவி நந்தினிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி கோபித்துக் கொண்டு, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து நந்தினியை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முத்தையா சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கண்டித்த தந்தை கொலை கடந்த 24-ந்தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த முத்தையா, மீண்டும் மனைவி நந்தினியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இதனால் பயந்துபோன நந்தினி உயிருக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறி தப்பியோடினார். மனைவியை முத்தையா கொடூரமாக தாக்குவதைக் கண்ட தந்தை பெருமாள், மகனின் செயலைக் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த முத்தையா, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து தந்தை பெருமாளை சரமாரியாகத் தாக்கியுள்ளார். கொலை நாடகம் அம்பலம்- கைது இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய தந்தையை முத்தையா மீட்டு, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தனது தந்தை பெருமாளை தனது மனைவி நந்தினிதான் கட்டையால் அடித்துக் கொலை செய்ததாகக் கூறி முத்தையா நாடகமாடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடமதுரை போலீசார், பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் நந்தினி மற்றும் முத்தையாவிடம் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்றுவிட்டு, முத்தையா பொய் புகார் கூறி நாடகமாடியது உறுதியானது. இதையடுத்து போலீசார் முத்தையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையையே மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Dindigul || திண்டுக்கலில் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் — Thanthi TV (@ThanthiTV) September 26, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-farmer-beaten-to-death-son-arrested-after-accusing-his-wife




