சென்னை, தமிழகத்தில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் டெங்கு காய்ச்சல், கொரோனா, சின்னம்மை, கூகைக்கட்டு அம்மை போன்ற நோய்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 'ஸ்கிரப் டைபஸ்' என்ற உண்ணி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் சில தொற்று நோய் பாதிப்புகள் சுவாசம் வழியாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனிடையே அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் டெங்குவை விட, சுவாசத் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இது போன்ற பாதிப்புகள் ஒருவரிடம் இருந்து, மற்றவர்களுக்கு எளிதாக பரவும். ஆனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உறவினர்கள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், தொற்று பரவல் மருத்துவமனைகள் மூலமாகவும் நிகழக்கூடும். எனவே, அலட்சியம் காட்டாமல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/spread-of-respiratory-infections-people-visiting-hospitals-must-wear-face-masks-health-department-directive




