சென்னை, மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், காவேரி நதியில் தண்ணீர் திறந்துவிடாததைக் கண்டித்தும், ஒகேனக்கலில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;- போராட்டம் வெற்றி தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாத கர்நாடக அரசுகளின் செயல்பாட்டை எதிர்த்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றியமைக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கழக அவைத்தலைவர் இளங்கோவனுக்கும், தர்மபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் குமாருக்கும், தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விஜயசங்கருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் பழனியப்பனுக்கும், திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவேரி தனபாலனுக்கும், தாராபுரம் காளிமுத்துக்கும் தேமுதிக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மனமார்ந்த நன்றி அதேபோல், கழக அணி நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கழகத் தொண்டர்கள் மற்றும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உறுதுணையாக இருந்த பொதுமக்கள் மற்றும் விவசாய பெருமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmdk-thanks-everyone-who-made-the-hogenakkal-protest-demonstration-a-success-premalatha




