இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டாலில் நடைபெற்றது. கடந்த போட்டியில் படு தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரில் 2-0 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளதால் இன்றைய போட்டியில் வென்று தொடரை தக்க வைக்க போராடும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்ட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தது. 13.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 159 ரன்களை இங்கிலாந்து எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிகெட் தொடரை 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரையும் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/india-vs-englnd-fourth-t20-cricket-england-won-by-9-wkts




