தையல் தெரிந்த ஒரே பறவை உலகத்தில் இது ஒன்று தான்! மனிதர்களுக்கு தையல் மெஷின் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பே இந்த குருவி இலையை தைத்து வீடு கட்ட ஆரம்பித்து விட்டது. யார் இந்த தையல்கார குருவி? தமிழில் தையல்கார குருவி, தையல் சிட்டு என்பார்கள். இதன் அளவு வெறும் 10 செ.மீ. தான் நம்ம விரல் அளவு பச்சை முதுகு, வெள்ளை வயிறு, தலையில் செம்பு கலர் தொப்பி "சிப். சிப். சிப்." என்று ஒரே சத்தத்தை திரும்ப திரும்ப கத்தும். எப்படி வீடு கட்டும்? முதலில் பெரிய மாமரம், பலா மரம் இலையை தேடும். 2 அல்லது 3 பெரிய இலைகளை பக்கத்தில் பக்கத்தில் இருக்குமாறு பார்க்கும். தன் எச்சிலால் பருத்தி, சிலந்தி வலை, தேங்காய் நாரை ஒட்டி நூல் போல தயாரிக்கும் தன் கூர்மையான அலகை ஊசி போல பயன்படுத்தி இலையில் ஓட்டை போடும். பிறகு தயாரித்த நூலை அந்த ஓட்டை வழியாக இழுத்து இலைகளை தைக்கும். மெத்தை ஒரு கூட்டுக்கு 30 முதல் 60 தையல் போடும். அதில் ஒரு தையல் கூட பிரியாது இலைக்கு வெளியே பார்க்க பச்சை இலை மாதிரி தான் இருக்கும், யாருக்கும் தெரியாது உள்ளே கூடு இருக்கு என்று உள்ளே பஞ்சு, முடி, இறகு வைத்து மெத்தை மாதிரி ஆக்கும் இதை கட்டி முடிக்க சில நாள் ஆகும் ஆணும் பெண்ணும் சேர்ந்து கட்டும். ஏன் இலையை தைக்கிறது? பாம்பு, பருந்து, காகம் போன்ற எதிரிகளுக்கு இலைக்குள் கூடு இருப்பது தெரியாது. மேலும், இயற்கையிலேயே இந்த இலைக்கூடு மழைநீர் உள்ளே புகாதவாறு பாதுகாக்கிறது. பச்சை இலைகள் வெயிலை தடுத்து, கூட்டிற்குள் குளிர்ச்சியான சூழலை தரும். விவசாயிகளின் நண்பன்! இது வயலில் உள்ள புழு, பூச்சிகளை தின்று விவசாயத்தை காக்கும். ஒரு நாளைக்கு பல பூச்சிகளை தின்னும். 10 செ.மீ. பறவை, ஊசி இல்லாமல் தைக்கிறது, பொறியாளருக்கே பாடம் சொல்கிறது! இயற்கையை விட பெரிய பள்ளிக்கூடம் இல்லை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/amazing-bird-that-builds-homes-by-stitching-leaves-without-needle-and-thread-tailorbird




