சென்னை, பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைப்பதற்காக, தென்மேற்கு ரெயில்வே கீழ்க்கண்டவாறு சிறப்பு ரெயில்களை (தேவைக்கேற்ப இயக்கப்படும் ரெயில்கள்) அறிவித்துள்ளது. ரெயில் எண் 06569/06570 SMVT பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள்: ரெயில் எண் 06569 SMVT பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், 20 ஆகஸ்ட் 2026 (வியாழன்) அன்று 17.10 மணிக்கு SMVT பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, மறுநாள் 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடையும் (1 சேவை). மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06570 திருவனந்தபுரம் வடக்கு - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில், 22 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை) அன்று 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிலிருந்து புறப்பட்டு, மறுநாள் 6 மணிக்கு SMVT பெங்களூருவைச் சென்றடையும் (1 சேவை). பெட்டிகளின் அமைப்பு: 1- ஏசி இரு அடுக்கு (AC Two Tier) பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு (AC Three Tier) பெட்டிகள், 10- ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் & 2- சரக்கு மற்றும் பிரேக் வேன்கள். ரெயில் எண் 06569/06570 SMVT பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு - SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24-மணிநேர அடிப்படையில்):- நாளை முன்பதிவு மேற்கூறிய சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு, 16.08.2026 (நாளை) அன்று காலை 8 மணிக்கு தென் ரெயில்வே தரப்பிலிருந்து தொடங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-to-run-between-bengaluru-and-thiruvananthapuram




