இந்தியாவின் பன்மொழி தன்மையை பாதுகாப்பதுடன், அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தினார். மும்பையில் நடைபெற்ற 6-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- ஒரு குழந்தை தனது தாய்மொழியின் மூலமாகவே தனது தாய், மண், வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியும். தாய்மொழி என்பது வெறும் தகவல் தொடர்புக்கான கருவி அல்ல. அது ஒரு சமூகத்தின் நினைவுகளையும், அடையாளத்தையும் தாங்கி நிற்கிறது.எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் தாய்மொழியிலேயே பேச வேண்டும். ஒருவர் தனது சொந்த மொழியை பேசினால் தாழ்வாக கருதப்படும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும்.இளைஞர்கள் உலகின் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தங்களது தாய்மொழியை ஒருபோதும் கைவிடக்கூடாது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/child-can-understand-india-only-through-mother-tongue-amit-shah-bats-for-indian-languages




