தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை. 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது, ``நேற்றைய தினம் நடைபெற்றது அரசியல் ரீதியாக அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளுக்கான ஒரு தேநீர் விருந்து மட்டுமே. அந்த விருந்தில் நாங்கள் கலந்துகொண்டு ஏதேனும் விவாதங்களோ அல்லது கேள்விகளோ எழுப்பினால், அது தேநீர் விருந்தின் நல்ல சூழலலாக இருக்காது என்பதால் நாகரிகம் கருதிப் புறக்கணித்தோம். தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தேநீர் விருந்தில் கலந்துகொண்ட ஜனநாயகச் சக்திகளுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அங்கு பங்கேற்ற எந்தவொரு கட்சி மீதும் எங்களுக்கு அரசியல் பகையோ அல்லது முரண்பாடோ கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைப் பகை என்பது ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தமும், பாஜக-வின் அரசியலும்தான். தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே எங்களது ஆதரவை வழங்கினோம். மக்களின் விருப்பப்படி இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். திமுகவினர் தங்களுக்குள்ள உரிமையின்படி ஆளுநரைச் சந்தித்திருக்கிறார்கள்; யார் வேண்டுமானாலும் யாரையும் சந்திக்கலாம் என்பதால், அந்த விவரங்கள் முழுமையாக வெளிவந்த பிறகு அதைப் பற்றிப் பேசலாம். இதில் விவாதிக்க எதுவும் இல்லை" என்றார். ஆட்சி அதிகாரம் மற்றும் குதிரைப் பேரக் குற்றச்சாட்டுகள் குறித்து எழுந்த பல்வேறு வாதங்களுக்கு ஒரே வரியில் முற்றுப்புள்ளி வைத்த அவர், ''சட்டத்திற்குப் புறம்பான எந்தவொரு செயலையும் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்'' என்று எச்சரித்தார். ''தமிழ்நாட்டு மக்கள் நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்ற உன்னதமான அரசியல் மரபுகளுக்கும், அறநெறிகளுக்கும் புறம்பான எந்தவொரு காரியத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது என்று அவர் மிக உறுதியாகத் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். "தவெக செய்வது Horse Trading அல்ல, Horse Racing" - பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/what-is-reason-for-boycotting-tvk-tea-party-cpis-veerapandian-explains




