சமூகநீத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. இந்த விவாதத்தின் போது 'அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம்' குறித்து கடும் வாக்குவாதம் எழுந்தது. கோவி.செழியன் திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், 'ஆதிதிராவிட மக்களுக்காக திமுக எதையும் செய்யாததை போல அமைச்சர் பேசியிருக்கிறார். தீப்பிடித்து எரியாத கான்க்ரீட் வீடுகளை தலித் மக்களுக்கு கட்டிக் கொடுத்தது திமுகதான். மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராமை அழைத்து வந்து அந்தத் திட்டத்தை கலைஞர் ஆரம்பித்தார். ஜெகஜீவன் டெல்லி சென்று இந்திராவிடம் அதை கூறினார். அதன்பிறகுதான். இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியது திமுகதான். ஆதிதிராவிடனை கோவில் அறங்காவலராக நியமித்தது கலைஞர்தான்' என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், 'பெரியார், கலைஞரின் கனவான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஆனால், எத்தனை பேர் அந்தத் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் ஆகினார்கள்? ஐந்து வருடமும் அந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினீர்களா? அந்த டேட்டாவை நாங்கள் கொடுக்கிறோம்' என்றார். அமைச்சர் ஆதவ்வின் கேள்விக்கு பதில் கூறிய முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 32 பேரை அர்ச்சகராக்கினோம். நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஆகமக் கமிட்டியை இறுதி செய்ய வேண்டிய உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் ஆதவ் இந்த அரசு அதற்கு ஆறு மாதம் அவகாசம் கேட்டிருக்கிறது. நீங்கள் விரைந்து செயல்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், 'சில மதவாதிகளின் அழுத்தத்தால் கேஸை போட வைத்து இவர்களே திட்டத்தை கைவிட்டிருக்கிறார்கள். நாங்கள் அந்த வழக்கில் வென்று திட்டத்தை செயல்படுத்துவோம். பெரியாரின் பெயரை உச்சரிக்க சேகர் பாபுவுக்கு அருகதை இல்லை' என்றார். கொஞ்ச நேரம் கழித்து இதற்கு பதிலளித்த சேகர்பாபு, 'மதத்தால் இனத்தால் மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் சக்திகள்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றார்கள்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/joining-hands-with-religious-extremists-the-all-caste-priest-scheme-has-been-stalled-aadhav-slams-dmk




