நாகர்கோவில், நாகர்கோவிலில் கல்லூரி மாணவனுக்கு, மருத்துவ ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவனுக்கு பாலியல் தொல்லை நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 23 வயதான வாலிபர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறேன். குடும்ப வறுமையின் காரணமாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் மூலம் பகுதி நேர பணியாளராக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில் அங்கு பணியாற்றும் எனக்கு சீனியரான மருத்துவ ஊழியர் ஒருவர் என்னிடம் சகஜமாக பேசினார். பின்னர் திடீரென பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். ஓரின சேர்க்கை தொல்லை ஓரின சேர்க்கைக்கு, என்னை வற்புறுத்தி தொல்லை கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னை தொடர்ந்து ஓரின சேர்க்கைக்கு அழைத்து வருகிறார். இதற்கிடையே பணி நிமித்தமாக சென்னைக்கு செல்ல வேண்டும் என்று அழைத்துச் சென்று பஸ்சில் வைத்து, எனக்கு பாலியல் தொல்லை அளித்து ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தினார். மேலும் எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார். இந்த செயலால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இது குறித்து வெளியே கூறினால், வெளி மாநில பணியாளர்களை வைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-worker-suspended-after-complaint-of-sexual-harassment-against-student




