பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த அமிதாப்பச்சன் அதிலிருந்து மீண்டார். அதனால் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். தற்போது கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயம் அடைந்தார். கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது காயம் அடைந்தது குறித்து கோபனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்ச்சி தொடங்கும்போது வழக்கமாக மேடையின் மையத்தில் நின்றுகொண்டு தனது சிறப்பம்சமான தொடக்க உரையை நிகழ்த்தும் அமிதாப்பச்சன் இம்முறை தனது இருக்கையில் அமர்ந்திருந்தவாறே காணப்பட்டார். படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததாகவும், அதனால் எழுந்து நிற்பதில் சற்று சிரமம் இருப்பதாகவும் அவர் கூறினார். "வழக்கமாக, நான் மேடையின் மைய பகுதியில் நின்று பேசுவேன். ஆனால் இன்று, எனக்கு முழங்காலில் காயம் உள்ளது. படப்பிடிப்பின் போது, நான் வழுக்கி விழுந்து என் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே எழுந்து நிற்பதில் சிறிது சிரமம் இருப்பதால், உட்கார்ந்து கொண்டே தொடக்க உரையை வழங்குகிறேன்'' என்று அமிதாப்பச்சன் தெரிவித்தார். இருப்பினும், காயம் பெரிதாக இல்லை என்றும், விரைவில் சரியாகிவிடும் என்றும் ரசிகர்களுக்கு உறுதியளித்தார். அமிதாப் பச்சன் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்த வதந்திகளை அமிதாப்பச்சன் மறுத்துள்ளார். தனது சமூக வலைப்பதிவு ஒன்றில் `ஓய்வு பெற விரும்புகிறேன்' என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அதனை தொடர்ந்தே இந்த வதந்தி வெளியானது. கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாரா அல்லது திரைப்படங்களிலிருந்து விலகுகிறாரா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, தான் உறங்கச் செல்வது குறித்தே அப்படிப் பதிவிட்டதாக நகைச்சுவையுடன் அவர் குறிப்பிட்டார். மேலும், திரைப்படத் துறையிலிருந்து தான் விலகவில்லை என்றும் ரசிகர்களுக்கு உறுதியளித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/actor-amitabh-bachchan-injured-after-falling-during-kaun-banega-crorepati-shoot



