திருவனந்தபுரம், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சகோதரி கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசனை சந்தித்தார். போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது சகோதரின் எல்மா அவரியோ. இந்நிலையில், எல்மா அவரியோ கேரளாவுக்கு வந்துள்ளார். அவர் தனிப்பட்ட பயணமாக கேரளாவுக்கு வந்துள்ளார். ரொனால்டோவின் சகோதரி - கேரள முதல்-மந்திரி சந்திப்பு கேரளா வந்துள்ள எல்மா அவரியோ இன்று அம்மாநில முதல்-மந்திரி வி.டி.சதீசனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கேரளாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளதாக வி.டி.சதீசன் கூறினார். பின்னர், இருவரும் வீடியோ, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதேவேளை, கேரளாவில் உள்ள ரசிகர்களின் அன்பு, வரவேற்பு குறித்து ரொனால்டோவிடம் கண்டிப்பாக கூறுவதாக எல்மா அவரியோ தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/football/ronaldos-sister-meets-kerala-chief-minister




