சென்னை, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- விக்ரம் சோலார் நிறுவனம் விக்ரம் சோலார் குழுமம் தமிழ்நாட்டில், ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இரண்டு இடங்களில் சூரியஒளி மின்னழுத்த (Solar PV) தொகுதி உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் சூரியஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் நிறுவியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்நிலையில், இன்று (9.7.2026) திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-15-thousand-crore-investment-employment-for-2670-people-mou-signed-with-vikram-solar




