டெல்லி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 அதன்படி, இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. டாஸ் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இரு அணி வீரர்கள் விவரம் இந்தியா ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), திலக் வர்மா, ஷிவம் துபே, நிதிஷ் குமார், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆப்கானிஸ்தான் இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (கீப்பர்), செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷீத் கான், நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/first-t20-india-opts-to-bowl-vs-afghanistan




