சென்னை, தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ளதாகவும் சில இடங்களில் தினசரி 30- லிருந்து 50 லிட்டர் வரையில் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பச்சை மற்றும் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் கிடைப்பது சிக்கல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன இது குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் என அன்றாடம் பாலை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விஷயம். அது மட்டுமல்ல குடும்பங்கள் பால் காபி போன்றவர்களுக்கு தினமும் பயன்படுத்தும் பச்சை பால் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது என்பதும். அதிக அடர்த்தியுடைய ஆரஞ்சு பால் கேட்பவர்களுக்கு இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட நீலப் பால் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆவின் நிர்வாகம் இதை உடனே சரி செய்ய வேண்டும் மரியாதைக்குரிய தமிழக முதல்-அமைச்சர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்ல விவசாயிகளிடமிருந்தும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்தும் பால் கொள்முதல் செய்வது ஆவின் ஒரு லிட்டருக்கு ரூ.35 கொடுப்பதாகவும் இதே தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.50 கொடுப்பதால். ஆவினுக்கு பால் கிடைப்பதிலும் சிரமம் இருக்கிறது என்பதையும் சில அதிகாரிகள் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். நெய் விலை உயர்வு பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதே சமயத்தில் நெய்யின் விலையை ஏற்றி இருப்பதும் கண்டனத்திற்குரியது. 500 எம்எல் நெய் ரூ.332.4-லிருந்து ரூ.342.6-க்கும் உயர்த்தப்பட்டிருப்பது ஒரு லிட்டர் பெட் பாட்டில் நெய் ரூ.650.72-லிருந்து ரூ.664.78-ஆக ஏற்றப்பட்டிருப்பது. பொதுமக்கள் மீது சுமையை ஏற்றுவதாகும். ஆக ஆவின் நிர்வாகம் உடனே தனி கவனம் செலுத்தி பால் கொள்முதல் விலையை உயர்த்தி. கிடைக்க வேண்டிய பாலின் அளவு குறையாமல் பார்த்து எந்த மாவட்டத்திற்கும் பால் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-should-be-resolved-immediately-tamilisai-soundararajan-insists




