திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 90 ஆயிரத்து 293 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 53 ஆயிரத்து 90 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.3 கோடியே 81 லட்சம் ஆகும். அன்று 4 லட்சத்து 60 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் 4 ஆயிரத்து 175 பேர் மருத்துவச் சிகிச்சை மற்றும் மருத்துவச் சேவைகளை பெற்றனர். இந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக் சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி ஆக்டோபஸ் சர்க்கிள் அருகே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக் தர்கள் சுமார் 20 முதல் 22 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/devotees-waited-for-22-hours-to-have-darshan-at-tirupati




