சென்னை, இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்டர் முனீபா அலி சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 23 முதல் இலங்கையின் ஹம்பாந்தோட்டாவில் வருகிற 23 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ள இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான 15 பேர் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 அணிகளை பாகிஸ்தான் மகளிர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. டி20 அணியில் 8 மாற்றங்கள் இதில் டி20 அணியை முனீபா அலி சித்திக்கும் ஒருநாள் தொடரை பாத்திமா சனாவும் வழி நடத்த உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அணியிலிருந்து 8 மாற்றங்களை பாகிஸ்தான் தேர்வாளர்கள் செய்துள்ளனர். இதனால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட டி20 அணியை முனீபா அலி வழிநடத்த உள்ளார். ஈமான் நசீர், ஹம்னா பிலால், மஹாம் அனீஸ், மோமினா ரியாசத், நஜிஹா ஆல்வி, ஷாவால் சுல்பிகர், உம்-இ-ஹானி மற்றும் வஹீதா அக்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 3 வீராங்கனைகளுக்கு அறிமுக வாய்ப்பு இதில், ஈமான் நசீர், மஹாம் அனீஸ் மற்றும் மோமினா ரியாசத் ஆகியோர் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகவில்லை. இலங்கை தொடரின் போது அவர்கள் முதல் முறையாக சர்வதேச அரங்கில் களமிறங்கும் வாய்ப்பை பெறலாம். போட்டி அட்டவணை பாகிஸ்தான் மகளிர் அணி வருகிற 20-ம் தேதி இலங்கை சென்றடைய உள்ளது. பின்னர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிகள் 23, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. அதன் பின்னர் டி20 தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் ஒருநாள் அணி: பாத்திமா சனா (கேப்டன்), ஆயிஷா ஜாபர், குல் பெரோசா, மஹாம் அனீஸ், மோமினா ரியாசத், முனீபா அலி சித்திக், நஜிஹா ஆல்வி, நஷ்ரா சந்து, சதாப் ஷமாஸ், சைரா ஜபீன், சித்ரா அமீன், சையதா அரூப் ஷா, தஸ்மியா ருபாப், உம்-இ-ஹானி மற்றும் வஹீதா அக்தர். பாகிஸ்தான் டி20 அணி: முனீபா அலி சித்திக் (கேப்டன்), ஆயிஷா ஜாபர், ஈமான் நசீர், ஐமன் பாத்திமா, ஹம்னா பிலால், மஹாம் அனீஸ், மோமினா ரியாசத், நஜிஹா ஆல்வி, நஷ்ரா சந்து, சைரா ஜபீன், ஷாவால் சுல்பிகர், தஸ்மியா ருபாப், தூபா ஹாசன், உம்-இ-ஹானி மற்றும் வஹீதா அக்தர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/muneeba-ali-siddiqui-to-captain-pakistan-in-t20is-against-sri-lanka-in-fatimas-absence




