மதிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. கதாநாயகனாக உயர்ந்த சூரி ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. தொடர்ந்து ‘ஜில்லா’, ‘வேதாளம்’, ‘அண்ணாத்த’, ‘ரஜினிமுருகன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. நட்சத்திர பட்டாளத்துடன் ‘மண்டாடி’ தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வைரலான பாடல்கள் இதற்கிடையில் இந்த படத்திலிருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ என்ற அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் நடிகர் சூரியின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. டிரெய்லர் வெளியானது இந்நிலையில், மதிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் செப்டம்பர் 10 ம் தேதி வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sooris-mandaadi-film-trailer-out




