சென்னை, தமிழகத்திற்கு மத்திய தொகுப்பு மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதனால், அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் தமிழக மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 7,000 மெகாவாட் நெய்வேலி, திருவள்ளூர் வல்லூர், தூத்துக்குடி, கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 7,000 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மின் நிலையங்களில் ஏற்படும் பழுது உள்ளிட்ட காரணங்களால், சராசரியாக 5,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்து வந்தது. மின்சாரம் குறைவு இந்த நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெய்வேலி மின் நிலையத்தின் 3 அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் கடந்த சில நாட்களாக 3,400 முதல் 3,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. நெருக்கடி தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழகத்தின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் குறைந்துள்ளதால், மின் தேவையை சமாளிப்பதில் தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/central-pool-power-supply-drops-to-3500-mw-tamil-nadu-faces-a-crisis-due-to-rising-electricity-demand




