வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம், நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமாக உள்ளது. இங்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆய்வுப்படிப்புக்காக 20 மில்லியன் டாலரை (சுமார் ரூ.190 கோடி), அங்கு வாழும் இந்திய தம்பதி நன்கொடையாக வழங்கினர். விகாஸ் சின்கா-அனுராதா என்ற இந்த தம்பதியும், அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆவர். தாங்கள் பயின்ற இந்த பல்கலைக்கழகத்துக்கு தொடர்ந்து அவர்கள் நன்கொடையை வழங்கி வருகின்றனர். விகாஸ் சின்கா-அனுராதா தம்பதியின் பரிசை நன்றியுடன் பெற்றுக்கொண்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அவர்கள் பெயரிலேயே செயற்கை நுண்ணறிவு கல்லூரி ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்த நன்கொடை குறித்து இந்திய தம்பதி கூறுகையில், 'எங்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி தான் எங்களுக்கு கதவுகளை திறந்தது. அதைப்போல மற்றவர்களுக்காக அந்த கதவுகளை திறந்து வைக்க விரும்புகிறோம்' என தெரிவித்தனர். ஆந்திராவின் கர்னூலில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பை தொடங்கிய இந்த தம்பதி பின்னர் அமெரிக்காவில் சென்று மேற்படிப்புகளை பயின்று, தற் போது அங்கேயே பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/indian-couple-donates-rs-190-crore-to-american-university




