மொன்ரோவா, லைபீரியாவில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லைபீரியா. இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இதனிடையே, கடந்த வாரம் அந்நாட்டின் தலைநகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டசன் நகரில் குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 ஆயிரத்து 200 கிலோ கொக்கையின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடி ஆகும். லைபீரியா வரலாற்றில் ஒரேநேரத்தில் இத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை போலீசார் இன்று தீ வைத்து எரித்து அழித்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் போலீஸ் உள்பட பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/liberia-destroys-336-million-cocaine-amid-police-corruption-investigation




