5 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்தது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. தொடர் விடுமுறை இந்திய பங்குச்சந்தை 3 நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நேற்று வர்த்தகமானது. காலை நிலவிய உற்சாகம் மதியத்துக்கு மேல் காணாமல் போனது. அமெரிக்க பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை மளமளவென விற்பனை செய்யத் தொடங்கினர். இதனால் சென்செக்ஸ் குறியீடு அதன் உச்சத்தில் இருந்து சுமார் 1,430 புள்ளிகள் சரிந்து, இறுதியில் 778 புள்ளிகள் (1.04 சதவீதம்) நிலைபெற்று 74 ஆயிரத்து 3 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் 'நிப்டி' 279 புள்ளிகள் (1.19 சதவீதம்) சரிந்து 23 ஆயிரத்து 118 புள்ளிகளாகக் குறைந்து அதல பாதாளத்தில் வர்த்தகமாகி நிலைபெற்றது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு சரிவாகும். பங்குகள் சரிவு இந்த சரிவால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடிக்கும் மேல் குறைந்து, ரூ.472 லட்சம் கோடியாக சரிந்தது. அதிகபட்சமாக பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் 6 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. இண்டிகோ, டைட்டன், பஜாஜ் பின்சர்வ், அதானி போர்ட்ஸ், எம் அண்ட் எம், எஸ்.பி.ஐ., டிரெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், எடர்னல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி மற்றும் பவர் கிரிட் பங்குகளும் 2 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இதனால் பங்குச்சந்தையில் ரத்த ஆறு ஓடியது. பணப்புழக்கம் குறைவு அதேசமயம், எச்.சி.எல். டெக், இன்போசிஸ், டெக் எம் மற்றும் டி.சி.எஸ். உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்தன. எச்.டி.எப்.சி. வங்கி பங்குகள் 1 சதவீதம் லாபம் ஈட்டின. அமெரிக்காவின் 10 ஆண்டு கால பத்திர வட்டி விகிதம் 5 சதவீதத்தைத் தாண்டியது, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை பீப் பாய்க்கு 108 டாலராக உயர்ந்தது, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் புதிய ஐ.பி.ஓ. வெளியீடுகளால் சந்தையில் பணப்புழக்கம் குறைந்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த வாரம் 11 ஐ.பி.ஓ.க்கள் மூலம் ரூ.24 ஆயிரத்து 574 கோடி திரட்டப்பட உள்ளது. முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும் மொத்தமாக நடப்பு மாதத்தில் இதுவரை வர்த்தகமான நாட்களில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடிவரை நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/stock-market-trading-has-slumped-to-a-five-month-low




