லண்டன் பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. 20 ஓவர் உலகக்கோப்பை 10-வது பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா. இங்கிலாந்து, வெஸ்ட்இண் டீஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை தோற்கடித்து 8-வது முறையாகவும், இங்கிலாந்து அணி 40 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 5-வது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியை சந்திக்கிறது. சோபி மோலினெக்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் எலிஸ் பெர்ரி, பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், ஜார்ஜ் வார்ஹாம், கிம் கார்த் உள்ளிட்டோர் சூப்பர் பார்மில் உள்ளனர். நாட் சிவெர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் டேனி வியாட், ஹீதர் நைட், சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், பிரையா கெம்ப் உள்ளிட்ட தரமான வீராங்கனைகள் உள்ளனர். 2-வது முறையாக 7-வது முறையாக கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை தொடர ஆஸ்திரேலிய அணி ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் அறிமுக போட்டியில் (2009-ம் ஆண்டு) சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் விளையாடும். சொந்த மண்ணில் 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்த எல்லா வகையிலும் வரிந்து கட்டும். இதனால், ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/womens-t20-world-cup-final-australia-england-clash-today




