புதுடெல்லி, தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை, 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கக் கோரி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும் நீர்வரத்து கடுமையாக குறைந்துள்ளதால், கூடுதல் நீரை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் திறப்பை நெறிப்படுத்தி கர்நாடக அரசுக்கு ஆணையத்தலைவர் எஸ்.கே.ஹல்தார் உத்தரவு பிறப்பித்தார். அதாவது தமிழகம் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கேட்ட நிலையில், வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 11.66 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அடுத்த நாட்களில் கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டது. இதையடுத்து, கடந்த 8 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் படி, காவிரியில் 6 ஆயிரம் கன அடி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், 6 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடியாத நிலை இருப்பதாகவும் அதனை 3 ஆயிரம் கன அடியாக குறைத்து உத்தரவிட்ட என்று கர்நாடக மேலாண்மை ஆணையத்தை நாடியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/cauvery-water-release-issue-karnataka-government-appeals-to-the-management-authority




