கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மந்தைவழி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரசையாக இன்று நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அலகாரங்களுடன் திருத்தேரில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் மனமுருக வேண்டி தரிசனம் செய்தனர். இந்த தேர் திருவிழாவில் கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். கள்ளக்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த தேரை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/grand-chariot-festival-at-kallakurichi-sri-muthumariamman-temple-after-two-years




