இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை.30) அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஹானே குறித்து உடன் பயணித்த ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர். விராட் கோலி - ரஹானே - ரோஹித் ரோஹித் சர்மா வெளியிட்டிருக்கும் பதிவில், "நாம் பல வருடங்களாக டிரெஸிங் ரூம்மைப் பகிர்ந்து வந்திருக்கிறோம். ரஹானே சாதித்தற்குப் பின்னால் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்று எனக்கு தெரியும். அர்ப்பணிப்பும், தொழில்முறையும் உங்களைத் தனித்து காட்டி இருக்கின்றன. அற்புதமான கிரிக்கெட் வாழ்கைக்கு எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருக்கிறார். Rahane: '278. Signing Off' - வெளிநாட்டு மைதானங்களின் மிடில் ஆர்டர் காவலன் ரஹானே! அதேபோல விராட் கோலி வெளியிட்டிருக்கும் பதிவில், "உங்களின் சிறந்த கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள் நண்பா. இந்திய கிரிக்கெட்டிற்காக நீங்கள் பல அற்புதங்களைச் செய்துள்ளீர்கள். அஜின்கியா ரஹானே உங்கள் பயணத்தைக் குறித்து நீங்கள் மிகவும் பெருமைப்படலாம். டெஸ்ட் போட்டிகளில் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர் நீங்கள். உங்களுக்கு எப்போதும் என்னுடைய நல்வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று வாழ்த்தி இருக்கிறார். Ajinkya Rahane: "டெஸ்ட் விளையாட விரும்பி செலக்டர்களை தொடர்புகொண்டேன். ஆனால்" - ரஹானே முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://sports.vikatan.com/cricket/rohit-sharma-and-virat-kohli-about-rahane




