எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸுக்கு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் குறைந்து வருவதாக வருந்துகிறார்கள் திருச்சி தி.மு.க-வினர். கட்சி மறுசீரமைப்புக்குப் பிறகும் சீனியரான கே.என் நேரு கண்ட்ரோலில்தான் திருச்சி தி.மு.க இருப்பதாகவும் தெரிகிறது. கே.என். நேரு தி.மு.க-வில் 78 மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தியிருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின். தமிழ்நாடு முழுக்க 11 மா.செ-க்களுக்கு 3 தொகுதிகளும் 99 மா.செ-க்களுக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையிலும் 3 தொகுதிகளைக் கவனிக்கும் பொறுப்பு பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களுக்கே வழங்கப்படும் என்கிறார்கள் உடன்பிறப்புகள். 9 தொகுதிகளைக் கொண்ட திருச்சி 4 கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மாவட்டம் மட்டும் மூன்று தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன. மறுசீரமைப்புக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் அதிகாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருச்சி மாவட்டத்தில் அன்பிலுக்கு 2 தொகுதிகளை நிர்வகிக்கும் மா.செ பொறுப்பு தரப்படவுள்ளதாகவும் வேறு ஒருவருக்கு 3 தொகுதி மா.செ பொறுப்பு செல்லவுள்ளதாகவும் தகவல் கசிக்கின்றன. நம்மிடம் பேசிய திருச்சி தி.மு.க-வினர், "மறுசீரமைப்புக்கு முன்பு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அன்பில் மகேஸ் திருவெறும்பூர், மணப்பாறை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகளைக் கவனித்துக் கொண்டார். அன்பில் மகேஷ் - நேரு மறுசீரமைப்புக்குப் பிறகு திருவெறும்பூர், மணப்பாறை என இரண்டு தொகுதிகள் அடங்கிய மா.செ பொறுப்பு வழங்கப்படவுள்ளது. அதேநேரம், திருச்சி மத்திய மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருவரங்கம், திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகளும். திருச்சி கிழக்கில் மண்ணச்சநல்லூர், லால்குடி தொகுதிகளும் திருச்சி வடக்கில் முசிறி, துறையூர் தொகுதிகளும் ஒதுக்கப்படுள்ளன. "விஜய் கன்னியாகுமரி போனாரே. ஒரு தொகுதியாச்சு ஜெயிச்சீங்களா?" - உதயநிதி vs ஆனந்த் மற்ற மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் சென்னையில் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கடலூரில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விருதுநகரில் தங்கம் தென்னரசு போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அதேநேரம் கீதா ஜீவன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு 2 தொகுதிகள் அடங்கி மா.செ பொறுப்பு ஒதுக்கப்படவுள்ளது. ஆனால் இவர்களுக்கு 2, மற்றவர்களுக்கு 3 எனப் பேதம் காட்டப்படவில்லை. ஆனால், திருச்சியில் மட்டும்தான் முன்னாள் அமைச்சருக்கு 2 தொகுதிகளையும் மற்றவருக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன" என்றனர் உதயநிதி ஸ்டாலின் - கே.என் நேரு நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமானவர்கள், "கே.என் நேரு முதன்மைச் செயலாளராக இருப்பதால் 6 ஆண்டுகளுக்கு முன்பே மாவட்ட அரசியலிலிருந்து அவர் விலகிவிட்டார். எனவே மா.செ ரேஸில் அவரில்லை. அதேசமயம், 3 தொகுதிகள் கொண்டு திருச்சி மத்திய மாவட்டத்துக்குள்தான் கே.என் நேருவின் தொகுதியாக திருச்சி மேற்கு தொகுதி வருகிறது. எனவே அந்த மத்திய மாவட்டத்தை நேருவின் மகன் அருண் நேருவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. 2024-ல் நேரடி அரசியலுக்கு வந்த அருண் நேருவுக்கு 3 தொகுதிகள் அடங்கிய மா.செ பொறுப்பும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு 2 தொகுதி மா.செ பொறுப்பும் வழங்கப்படவுள்ளது. அருண் நேருவுக்காக கே.என் நேரு வாதாடிய நிலையில் தனது நண்பர் அன்பில் மகேஸுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி போராடவில்லை. மறுசீரமைப்புக்குப் பிறகும் திருச்சி தி.மு.க கே.என். நேரு கண்ட்ரோலில்தான் இருக்கிறது " என்றனர். TN Assembly: முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த விவாதம் | Full Story முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhi-led-down-anbil-mahesh-during-party-restructuring



