டோக்கியோ ஜப்பானில் சூறாவளி தாக்குதலை முன்னிட்டு, 19 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஜப்பானை பருவகால புயல்களில் ஒன்றான துஜுவான் சூறாவளி நெருங்கி வருகிறது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் இன்று நள்ளிரவு சூறாவளி தாக்கம் ஏற்படுத்தும். கனமழை எனினும், அது கரையை கடக்காது என கூறப்படுகிறது. ஜப்பானின் கிழக்கு கடலோர பகுதி வழியே வலிமையாக கடந்து செல்லும். இந்த சூழலில், அதற்கு முன்னரே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து தீர்த்து வருகிறது. 400 விமானங்கள் இதனால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனகவா பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதில் பெண் ஒருவர் உள்பட சிலர் சிக்கி கொண்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. துஜுவான் சூறாவளியால், மணிக்கு 143 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. சில சமயங்களில் மணிக்கு 198 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/typhoon-strikes-japan-1-9-million-evacuated-400-flights-cancelled




