காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் ஏரிவாய் கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “ஏரிவாய் கிராமப் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மூலம் ரூ.9.27 லட்சம் மதிப்பீட்டில் 604 மீட்டர் அளவில் ஜல்லி சாலை போடப்பட்டதாக பெயர்பலகை வைத்துள்ளனர். அந்த சாலையானது எங்கள் பகுதியிலோ ஊர் பொதுமக்களுக்காகவோ போடப்பட்டதாக தெரியவில்லை. இது குறித்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை நேரடியாகவும் மனுக்கள் மூலம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, எனவே காணாமல் போன சாலையை கண்டுபிடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியில் நடிகர் வடிவேல் கிணற்றை காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் அளிப்பது போல், சாலையை காணவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தது கவனத்தைப் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-road-is-missing-petition-submitted-to-the-kancheepuram-collector-in-the-style-of-comedian-vadivel




