சென்னை, சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கதவை திறக்க முடியாமல் வீட்டுக்குள் சிக்கி தவித்த 2 வயது குழந்தையை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 2 வயது குழந்தை சென்னை திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசித்து வருபவர் குமாரசாமி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 வயதில் அகல்யா என்ற மகள் உள்ளார். நேற்று குமாரசாமி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் பிரியா மற்றும் குழந்தை அகல்யா இருந்தனர். கதவை திறக்க முடியாமல் வீட்டுக்குள் சிக்கிய குழந்தை பிரியா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த குழந்தை அகல்யா, திடீரென வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டது. கதவை திறக்க முடியாததால் பின்னர் தாயைத் தேடி கதறி அழுதது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கதவு மற்றும் ஜன்னலை திறக்க முயன்றனர். திறக்க முடியாததால், திருவொற்றியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர் அந்த தகவலின் பேரில், பிரதாப் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு கருவியை பயன்படுத்தி கதவை திறந்து, உள்ளே சென்று அழுதுகொண்டிருந்த குழந்தை அகல்யாவை பத்திரமாக மீட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-year-old-child-trapped-in-house-unable-to-open-door-firefighters-rescue-him




